shadow

கவுசல்யா தந்தைக்கு தூக்கு தண்டனை அளித்த நீதிபதி திடீர் மரணம்

இந்தியாவையே உலுக்கிய உடுமலை சங்கர் வழக்கில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை உள்பட 6 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி அலமேலு

வழக்குகளில் மனிதாபிமானத்துடனும், சட்டத்தின் படியும் தீர்ப்பு வழங்குவதில் வல்லவரான இவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அவருடைய உயிர் சிறிது நேரத்தில் பிரிந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு, திருப்பூரில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற நீதிபதி அலமேலும் கடந்த 2016ஆம் ஆண்டு உடுமலை கொலை வழக்கில் ஒட்டுமொத்த மாநிலமும் திரும்பிப் பார்க்கும் வகையில் தீர்ப்பு வழங்கியவர், நீதிபதி அலமேலு நடராஜன். இவரது இழப்பு நீதித்துறைக்கு பெரும் இழப்பு என்று கூறப்படுகிறது.

Leave a Reply