shadow

1

இஸ்ரோவின் ஒரு பிரிவான இன்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ரிமோட் சென்சிங்(IIRS), 2 JRF பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இரண்டு JRF பணியிடங்களும் வெவ்வேறானவை. ஒவ்வொன்றுக்கு தனித்தனி கல்வித் தகுதிகள் உண்டு.

இதற்கான அதிகபட்ச வயதுவரம்பு 30 ஆண்டுகள். அதேசமயம், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.

குறைந்தபட்சம் எம்.டெக்., தகுதியைக் கோரும் புராஜெக்டிற்கு மாதம் ரூ.18 ஆயிரமும், இதரவற்றுக்கு மாதம் ரூ.16 ஆயிரமும் வழங்கப்படும். இவைதவிர, ஆண்டுக்கு ரூ.3,000, இதர செலவினத் தொகையாகவும் வழங்கப்படும்.

ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும. விண்ணப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர் 19.

விரிவான விபரங்களுக்கு //www.iirs.gov.in/Vacancies

Leave a Reply