shadow

இயக்குனர் நேசன் இயக்கிய ஜில்லா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் அவரை நோக்கி பிரபல நடிகர்கள் படையெடுக்கின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர். நேசன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

பொங்கலுக்கு ரிலீஸான விஜய், காஜல் அகர்வால் நடித்த ஜில்லா பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த வெற்றி காரணமாக இயக்குனர் நேசனுக்கு நிறைய வாய்ப்புகள் குவிகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர்கள் அவருடைய இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை ஜூனியர் என்.டி.ஆர் நேசனுக்கு போன் செய்து அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்த நேசன், தனது அடுத்த படம் எது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அந்த படம் தமிழ் அல்லது தெலுங்கில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

விஜய்யுடன் ஜில்லா படம் வேலை பார்த்தபோது மனம் மிகவும் திருப்தியாக இருந்தது என்றும் வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக மீண்டும் ஒரு படம் இயக்குவேன் என்றும் கூறினார். தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது என்றும் கண்டிப்பாக அதுவும் ஒரு ஆக்ஷன் படம்தான் என்றும் குறிப்பிட்ட நேசன், இந்த படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *