shadow

அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு தலைமைகள் இருந்தாலும் அக்கட்சிக்கு உரிமையாளர் பாஜக ஒருவர் தான் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்

அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன, மூன்று தலைமை இருந்தால் என்ன! உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே!

ஜோதிமணிக்கு பதிலடி அளிக்கும் வகையில் நடிகை காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது: என்ன செய்வது நீங்கள் ஒரு இரண்டு குடும்பத்திற்காக வேலை செய்ய பழகியுள்ளீர்கள் சகோதரி. இரண்டு தலைகள் அதிமுகவோ பாஜக சாமானியர் மக்களின் ஆட்சியோ உங்களுக்கு வித்தியாசமாக தான் இருக்கும், இங்கே உரிமையாளர் மக்கள் மட்டுமே!