shadow

8a copy
தற்போதைய ஐ.நா மனித உரிமை ஆணையத் தலைவராக நவநீதம் பிள்ளை இருந்து வருகிறார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவரது பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. ஏற்கனவே இவருடைய பதவிக்காலம் இரண்டு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுடன் இவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது.

இவரை அடுத்து ஐ.நா. மனித உரிமையின் புதிய தலைவராக ஜோர்டன் நாட்டு தூதர் செயித் அல் ஹுசைனை நியமித்து ஐ.நா. நேற்று அறிவித்துள்ளது.

ஐ.நா தலைவர் பான் கீ மூன் இந்த அறிவிப்பை நேற்று முறையாக அறிவித்துள்ளார்.  செயித் அல்ஹூசைன் தற்போது ஜோர்டான் நாட்டின் ஐ.நா. சபை தூதுவராக பதவி வகித்து வருகிறார்.

அல் ஹுசைன் கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டில் ஜோர்டான் தூதுவராக பணிபுரிந்து வந்த அனுபவம் உள்ளவர். இவரது தலைமையின் கீழ் ஐ.நா. மனித உரிமைக்கழகம் சிறப்பாக இயங்கும் என பான் கீ மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply