shadow

download (4)

இந்திய விமானப்படையின் மத்திய பிரிவு தலைமை அலுவலகங்களில் காலியாக உள்ள குருப் ‘சி’ பணியிடங்களை நிரப்ப பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

உ.பி. ஆக்ராவில் விமானப்படை நிலைய விமான கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம்:லோயர் டிவிசன் கிளார்க் – 04
எம்டிடி – 01
சமையலர் – 01
எம்டிஎஸ் – 02
சபேவாலா – 01

உ.பி., ஆக்ரா விமானப்படை நிலையத்தில் உள்ள கமான்டிங் ஆபீசர் யாக் ஆபீஸ்:
சமையலர் – 01
எம்டிஎஸ் – 03
விடுதி ஊழியர் – 01
 

உ.பி. ஆக்ரா விமானப்படை நிலையம், கமாண்டிங் ஆபீசர் பிடிஎஸ்:
எம்டிஎஸ் – 05

உ.பி. எஸ்டிஎன் பேரேலி விமானப்படை கமாண்டிங் ஏர் ஆபீசர்:
எம்டிடி – 02
சமையலர் – 01
எம்டிஎஸ் – 03
சலவையாளர் – 01
சபேவாலா – 01

உ.பி., பேரேலி விமானப்படை நிலையம், ஏபிஎம் 27 பி அண்ட் எஸ்யு:
சபேவாலா – 01

உ.பி., கோரக்பூர் விமானப்படை அலுவலகம்
எம்டிஎஸ் – 01

உ.பி. கோரக்பூர் விமானப்படை அலுவலகம்:
எம்டிஎஸ் – 01

உ.பி. கோரக்பூர் விமானப்படை மருத்துவமனை:
சபேவாலா – 01

உ.பி. அலகாபாத் பாம்ரலி விமானப்படை அலுவலகம்:
எம்டிஎஸ் – 01
சபேவாலா – 01

ம.பி. குவாலியர் விமானப்படை நிலையம்:
எம்டிடி – 01
சமையலர் – 01
எம்டிஎஸ் – 01
சபேவாலா – 02

உ.பி., அலகாபாத், பாம்ரலி கமாண்டிங் ஆபீசர் தலைமை அலுவலகம்:
எல்டிசி – 02
டெலிபோன் ஆபரேட்டர் – 01
எம்டிஎஸ் – 01

உ.பி., நைனிடால் போவாலி விமானப்படை நிலையம்:
மெஸ் ஸ்டாப் – 01
சபேவாலா – 01

உ.பி., வாரணாசி விமானப்படை துணை நிலையம்:
எம்டிஎஸ் – 01
சலவையாளர் – 01
சபேவாலா – 01

சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

வயது வரம்பு: 30.4.2015 தேதியின்படி எல்டிசி பணிக்கு 18 – 27க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 18 – 25க்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி விவரம்: எல்டிசி பணிக்கு விண்ணப்பிப்வர்கள் +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

எம்டிடி பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் மோட்டார் வாகன மெக்கானிசம் பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

டெலிபோன் ஆபரேட்டர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் பிரைவேட் பேட்டரி எக்ஸ்சேஞ்சை கையாளும் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.

சமையலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணியில் 6 மாதம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எம்டிஎஸ் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சபேவாலா பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெஸ் ஸ்டாப் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணியில் 6 மாதம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சலவையாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணியில் 6 மாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2015.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2015.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianairforce.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply