shadow

11

10+2 டெக்னிகல் எண்ட்ரி திட்டத்தின் கீழ் பிளஸ் 2 முடித்த மாணவர்களிடமிருந்து இந்திய ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 90 இடங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை முடித்த பின்னர் லெப்டினண்ட் ரேங்குக்கு இணையான பதவியில் அமர்த்தப்படுவார்கள். சம்பளம் ரூ.65,000 (CTC).

விண்ணப்பிப்போர் 1995 ஜூலை 1-லிருந்து 1998 ஜூலை 1க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்து பின்னர் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 70 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்குத் தங்கும் வசதியும் உணவு வசதியும் அளிக்கப்படும்.

விருப்பமுடைய மாணவர்கள் //www.joinindianarmy.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூன் 30. விண்ணப்பித்த பின்னர் விண்ணப்பத்தை 2 பிரிண்ட் எடுத்து வைக்க வேண்டும். ஒரு பிரதியில் புகைப்படம் ஒட்டி கெஜட்டட் அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அதை அலகாபாத், பெங்களூரு, போபால் ஆகிய நகரங்களில் நடக்கும் நேர்காணலுக்கு எடுத்துவர வேண்டும். சைக்கோமெட்ரிக் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு: //joinindianarmy.nic.in/

இன்ஜினீயர்களுக்கு வேலை மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் & இன்ஜினீயர்ஸ் லிமிடெட். இதில் உதவி மேலாளர்கள் பணிக்கான 45 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. இன்ஜினீயரிங் (4 ஆண்டுகள்), ஏஎம்ஐஇ, சிஏ, எம்பிஏ. இறுதி செமஸ்டர் தேர்வெழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது:

2014 மே 1 அன்று 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படியான வயதுச் சலுகை உண்டு.

பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும் ஏனையோர் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொல்கத்தாவில் நடைபெறும்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் //jobapply.in/GRSE2014Adv2/DefaultAdv2.aspx என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அப்ளிகேஷனை பிரிண்ட் எடுத்து அதை Post Box No. 4334, Kalkaji Head Post Office, New Delhi 110019 என்னும் முகவரிக்கு சாதாரணத் தபாலில் ஜூன் 12க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 5. கூடுதல் விவரங்களுக்கு //www.grse.nic.in/

Leave a Reply