shadow

teach

மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: B/45706/CSB-2015/AWES

பணி: PGT (Post Graduate Teacher)

தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உளவியல், உடற் கல்வியியல், கம்பியூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளில் முதுகலை மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

பணி: TGT (Trained Graduate Teacher)

தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறையில் இளங்கலை மற்றும் பி.எட் முடித்து மத்திய, மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: PRT (Primary Teacher)

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: //awes-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2015

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 23.12.2015

தேர்வு முடிவுகள் //awesindia.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் முழுவிவரங்கள் அறிய //awes-cbs.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply