shadow

Omar-Abdullah-Fight-Over-Womens-Rights-in-JK-Narendra-Modiகடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370 பிரிவின்கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று அமைச்சர் பதவியேற்ற பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை விலக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல் சட்டம் 370 பிரிவின் சிறப்பு அந்தஸ்தை காஷ்மீர் மாநிலத்தில் இருப்பதால்தான் ஜம்மு காஷ்மீர் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்த அந்தஸ்தை விலக்கினால் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என்று மிரட்டியுள்ளார்.

முதல்வர் உமர் அப்துல்லாவின் மிரட்டலுக்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் ராம் மகாதேவ், ஜம்மு காஷ்மீர் முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததொடு, 370 பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்தாலும், நீக்கப்பட்டாலும், காஷ்மிர் இந்தியாவின் ஒரு பகுதிதான். அதை மாற்ற யாராலும் முடியாது என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் முதல்வரின் சர்ச்சைக்குரிய பேச்சால் மோடியின் அரசுக்கு முதல் தலைவலி எழுந்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply