shadow

ஜித்தன் 2 திரைவிமர்சனம்

jithan2ஜித்தன் படத்தின் வெற்றியை அடுத்து பல ஆண்டுகள் கழித்து ஜித்தன் ரமேஷ் நடித்துள்ள படம் ‘ஜித்தன் 2’. இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் ஜித்தன் படத்தின் தொடர்ச்சி என்பதால் ஒருசிலர் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டினர். ஆனால் முதல் காட்சி முடிந்தவுடனே வந்த நெகட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த படம் ஒரு வாரத்தை தாண்டுமா? என்பது சந்தேகம்தான்.

கொடைக்கானலில் ஒரு புதிய பங்களாவை வாங்குகிறார் ஜித்தன் ரமேஷ், அந்த பங்களாவில் ஸ்ருஷ்டி டாங்கே என்ற பேய் அவ்வபோது ரமேஷை பயமுறித்து பங்களாவை விட்டு வெளியேற முயற்சி செய்கிறது. தந்தையின் நினைவாக வாங்கிய பங்களாவை விட்டு வெளியேற விருப்பம் இல்லாத ரமேஷ், ஸ்ருஷ்டி டாங்கேவின் விருப்பத்தை பூர்த்தி செய்தால் அதை அந்த பங்களாவில் இருந்து விரட்டி விடலாம் என்று முடிவு செய்கிறார். ஸ்ருஷ்டியின் விருப்பம் என்ன? அதை நிறைவேற்றி பங்களாவை காப்பாற்றினாரா? என்பது தான் மீதி கதை.

ஒரு திரைப்படம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சரியான உதாரணம் இந்த படம். ஜித்தன் ரமேஷ் நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார். பயம், அழுகை, காதல், காமெடி என்று எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரி ரியாக்ஷன் தான். இவர் நடிப்பை தொடருவது குறித்து யோசிக்க வேண்டிய காலம் இது.

ஸ்ருஷ்டி டாங்கே இரண்டாவது பாதியில்தான் அறிமுகம் ஆகிறார். பேயாக வந்து பயமுறுத்துகிறார், பின்னர் அழுதுகொண்டே தனது கதையை சொல்கிறார், கருணாஸ் உடன் இணைந்து காமெடி செய்கிறார். ஒரு நல்ல நடிகையை படத்தில் வேஸ்ட் செய்துள்ளனர்.

கருணாஸை தயவுசெய்து திருவாடனை தொகுதி மக்கள் வெற்றி பெற செய்து திரையுலகில் இருந்து அவரை வழியனுப்பிவிடுங்கள். காமெடி என்ற நினைப்பில் அவர் செய்யும் இம்சைகளால் கழுத்தில் ரத்தம்தான் வருகிறது. ரோபோ ஷங்கர், யோகிபாபு, சோனா ஆகியோர்கள் காட்சியிலும் அழுத்தம் இல்லை.

இயக்குனர் ராகுல் ஒருசில ஆண்டுகள் ஒரு நல்ல இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு அதன் பின்னர் அடுத்த படத்தை இயக்குவது அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் நல்லது

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் எந்த பயமுறுத்தலும் இல்லை. மொத்தத்தில் ஜித்தன் 2, ஒரு வேஸ்ட் திரைப்படம். தயவுசெய்து டிவியில் போட்டால்கூட இந்த படத்தை யாரும் பார்க்க வேண்டாம்….

Leave a Reply