பேசிக் போனில் கூகுள் அசிஸ்டெண்ட்: ஜியோவின் புதிய வசதி

இதுவரை ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோன்களில் மட்டுமே செயல்பட்டு வந்த கூகுள் அசிஸ்டெண்ட், , கூகுள் மேப், யூடியூப் ஆகிய செயலிகள் இனி ஜியோ பேசிக் போனிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் ஜியோ அறிமுகம் செய்த பேசிக் மொபைல், ரூ.1500 வைப்புத் தொகைக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த போன் முன்பதிவு இல்லாமலே நேரடியாக ஜியோ ஜியோ அலுவலகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில், ஸ்மார்ட்போனுக்கு நிகராக ஜியோ மொபைலிலும் கூகுள் அசிஸ்டெண்ட், கூகுள் மேப், யூடியூப் போன்றவை வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக கைய் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கைய் ஓஎஸ் நிறுவனத்துடனம் ஒப்பந்தம் போடவுள்ளதால் இந்த வசதியை பெறுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *