‘கொரில்லா’ படப்பிடிப்பை முடித்தார் ஜீவா

ஜீவா கடந்த சில மாதங்களாக டான் சாண்டி எனப்வர் இயக்கத்தில் உருவாகி வந்த ‘கொரில்லா’ என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் இந்த படத்தில் தன்னுடைய காட்சிகளின் படப்பிடிப்பை அவர் நேற்றுடன் முடித்தார்.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாக இருப்பதாகவும், அதனையடுத்து டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். தாய்லாந்தில் `காங்’ சிம்பன்சி குரங்குடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *