shadow

அனுஷ்கா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஜீவா-ஹன்சிகா

hansikaஆர்யா, அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகியுள்ள திரைப்படம் ‘இஞ்சி இடுப்பழகி. இந்த படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த படத்தில் ஜீவா மற்றும் ஹன்சிகா சிறப்பு தோற்றாத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆர்யாவின் நண்பரும் பிரபல நடிகருமான ஜீவா ‘இஞ்சி இடுப்பழகி படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளதாகவும், அதேபோல் கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சி ஒன்றில் நடிகை ஹன்சிகா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த படத்தில் ஏற்கனவே நாகார்ஜூனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாவுடன் ‘மீகாமன்’ படத்தில் நடித்த ஏற்கனவே நடித்துள்ள ஹன்சிகா இந்த படத்தில் நடிகையாகவே நடித்துள்ளதாகவும், உடல் எடை கூடுவதால் ஏற்படும் பிரச்சனை குறித்து ஒருசில அறிவுரைகளை ஹன்சிகா கூறுவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்காக அனுஷ்கா 20 கிலோ தனது உடல் எடையை அதிகப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Jiiva and Hansika acts cameo in Inji Iduppazhagi

Leave a Reply