shadow

jigarthanda movieமதுரையில் உள்ள ஒரு ரவுடியை பற்றி திரைப்படம் எடுப்பதற்காக மதுரை வரும் சித்தார்த், ரவுடியின் நெருங்கிய நபர்களுடன் பழகி அவனைப்பற்றிய தகவல்களை திரட்ட முயற்சி செய்கிறார். இதற்காக  தனது நண்பன் கருணாவின் உதவியை நாடுகிறார். இதற்கு கருணா முதலில் மறுக்க, பின்னர் நீதான் இந்த படத்தின் செகண்ட் ஹீரோ என்ற ஆசையை காட்டியவுடன் ஒப்புக்கொள்கிறார்.

மதுரை ரவுடி சேதுவை பற்றி விபரங்கள் சேகரிக்க சேதுவுக்கு நெருக்கமான மூன்று நபர்களை அவர்களுக்கு தெரியாமல் ஃபாலோ செய்கின்றனர். ஆனால் சேதுவை பற்றி எந்த உருப்படியான தகவல்களும் கிடைக்காமல் இருக்கும் நிலையில், திடீரென ஒருவர் தானாகவே முன்வந்து சேதுவைப்பற்றிய ரகசியங்களை சொல்வதாக ஒப்புக்கொள்கிறான்

இந்நிலையில் சேது ஒரு கொலை செய்யும்போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும் சித்தார்த்தும், கருணாவும் ரவுடி கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றனர். இவர்கள் இரண்டு பேர்களும் போலீஸ் ஆட்கள் என்றும், தன்னை என்கவுண்டரில் கொல்ல ரகசிய போலீஸ் என்றும் நினைத்து இருவரையும் கொலை செய்ய முயற்சி செய்யும்போது திடுக்கிடும் டுவிஸ்ட் ஏற்படுகிறது. அதன்பின்னர் நடக்கும் காமெடி கலந்து த்ரில் கலாட்டாதான் படத்தின் இரண்டாம் பாதி.

இந்த படத்தின் இரண்டாம் பாதியில் பல திடுக்கிடும் டுவிஸ்டுகள் இருப்பதால் அதை எல்லாம் இந்த விமர்சனத்தில் சொல்லி படம் பார்க்கும்போது சுவாரசியம் இல்லாமல் போகும் நிலையை உருவாக்க விரும்பாததால், கதையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம்.

இந்த படத்தின் முதல் ஹீரோ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான். பீட்சா என்ற விறுவிறுப்பான படத்தை கொடுத்த இவர், இரண்டாவது படத்திலும் தனது திறமையை காட்டி பெரிய இயக்குனர்களின் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டார். நகைச்சுவை ததும்பிய த்ரில் திரைக்கதை, படத்தின் இடையிடையே திடுக்கிடும் டுவிஸ்ட்கள், யாரும் எதிர்பார்க்க முடியாத க்ளைமாக்ஸ் என  அனைவரையும் அசத்திவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். வாழ்த்துக்கள்.

இந்த படத்தின் இரண்டாவது கதாநாயகன் கண்டிப்பாக சேதுதான். சூது கவ்வும், நேரம் படத்தில் வித்தியாசமான கேரக்டர்களை செய்த இவருக்கு இந்த படம் ஒரு புது அனுபவம். மிகவும் வெயிட்டான கேரக்டரை தன்னை நம்பி கொடுத்த இயக்குனரை ஒரு சதவிகிதம் கூட ஏமாற்றாமல் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனராக விரும்பும் சித்தார்த் மிகப்பெரிய ரிஸ்க் எடுப்பது, நண்பன் கருணாவுடன் லூட்டி அடிப்பது என சித்தார்த் தனக்கு கொடுத்த வேலையை சரியாக முடித்துள்ளார். இடையில் லட்சுமி மேனனுடன் காதல் என்று போகிறது அவரது கேரக்டர்.

லட்சுமி மேனனுக்கு நடிப்பதற்கு அதிக ஸ்கோப் இல்லாத படம் எனினும் அவர் இருந்தால் படம் ஓடிவிடும் என்ற செண்டிமெண்ட் இந்த படத்திற்கும் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.

படத்தின் திரைக்கதைக்கு ஏற்ற விறுவிறுப்பான ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை. இவர்கள் இரண்டு பேரும்தான் படத்திற்கு உண்மையிலேயே உயிர் கொடுத்துள்ளனர். ஜிகிர்தண்டா ரசிக்கத்தக்க திரைப்படம்.

Leave a Reply