shadow

 jaya punishment முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தரப்பட்ட தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்து வருகின்றன. பெரும்பாலானோர் இந்த தீர்ப்பு சட்டப்படி அளிக்கப்படவில்லை என்றே கூறிவருகின்றனர். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள், அவரை நேராக நின்று ஜெயிக்க முடியாமல் தோல்வி அடைந்த பச்சோந்தி அரசியல்வாதிகள் ஒருசிலர் மட்டுமே இந்த தீர்ப்பு நியாயமானது, நேர்மையானது என்று விமர்சித்துள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

கருணாநிதி: கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை மத்திய சட்ட அமைச்சர் சந்தித்து பேசிய போது இவர் கூறிய கருத்து என்னவெனில், “மத்திய அமைச்சர் முதல்வரை சந்தித்துவிட்டார் இனி வழக்கு ஒழுங்கா நடக்காது” ஆனால் தீர்ப்பு வந்தபின்னர் இவரிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது கருத்து கூற விரும்பவில்லை என சொல்லிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

jayalalitha and vaiko

வைகோ: ஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணி; நேர்மை அரசியலுக்கு நம்பிக்கை வெளிச்சம்; நீதித் துறையின் நம்பகத்தன்மையை இமயத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற தீர்ப்பு” என்று தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள இதே வைகோ, கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த போது கூறியது “1984-85ல் நாங்கள் இருவரும் மேல்-சபை எம்.பி.யாக இருந்தபோது அருகருகே அமர்ந்து இருந்தோம். நண்பர்களாக இருந்தோம். எனது பாராளுமன்ற பணியை அவர் பாராட்டுவார். 1998-ல் நாங்கள் கூட்டணி அமைத்தோம். அவர் என் மீது அன்பாக இருப்பார். அவர் அடுத்தவர் கருத்துக்களையும் கூர்ந்து கேட்பார்.

jayalalitha and ramdoss

டாக்டர் ராமதாஸ்: சட்டத்தையும் நீதியையும் எப்போதும் வளைத்துவிட முடியாது. நீதி இன்னும் வாழ்கிறது என்பதையே சொத்துக் குவிப்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு காட்டுகிறது. இவ்வாறு வீராவேசமாக கூறிய ராமதாஸ், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பேசிய ஒரு கூட்டத்தில் ஜெயலலிதா எனது அன்புச்சகோதரி. அவருடன் கூட்டணி வைத்ததில் பெருமைப்படுவதாக கூறினார்.

jayalalitha and vijayakanth

இதேபோல் ஜெயலலிதா ஒரே ஒரு எம்.எல்.ஏ சீட்டை வைத்துக்கொண்டு மேற்கொண்டு கட்சியை நடத்தலாமா? வேண்டாமா? என்று திணறிக்கொண்டிருந்தபோது அவரை கூட்டணியில் சேர்த்து 27 தொகுதிகளை ஜெயிக்க வைத்தவர் ஜெயலலிதா. ஆனால் அந்த விஜயகாந்த் தற்போது கூறுவது, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தமிழகத்திற்கு தலைகுனிவு என்று.

மேலும் இந்த வழக்கை ஆரம்பித்து வைத்த சுப்பிரமணிய சுவாமியே 2001ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்துதான் மத்திய அமைச்சர் ஆனால் என்பது குறிப்பிடத்தக்கது. 1994ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கை போட்ட சாமி, ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை சாமி பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.;

பொதுமக்கள் இவர்கள் போன்ற பச்சோந்தி தலைவர்களை இனம் கண்டுகொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக தற்போதையை நிலையில் உள்ளது.

Leave a Reply