பிரபல நடிகை வீட்டில் நகைகள் திருட்டு: ஒரேநாளில் கைது செய்த போலீசார்

கமல் ரஜினி உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகையின் வீட்டில் நகைகள் திருடு போனதை ஒரே நாளில் போலீசார் கண்டுபிடித்து சாதனை செய்துள்ளனர்

நடிகை ஜெயபாரதி கமல் ரஜினி உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தவர். நடிகை ஜெயபாரதியின் தனது நுங்கம்பாக்கம் வீட்டில் லாக்கரில் வைத்து இருந்த நகைகள் திடீரென காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது அவரது வீட்டின் காவலாளி மற்றும் டிரைவர் ஆகிய இருவர்ம் கூட்டணியாக இணைந்து நகைகளை திருடியது தெரியவந்தது

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நகைகளை அமைந்தகரையில் உள்ள ஒரு அடகு கடையில் விற்பனை செயததை கண்டுபிடித்தனர்

Leave a Reply