கார் விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை பலி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது ஹாலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் சிட்னி நகரில் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இவர் சென்ற கார்மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை ஜெசிகா மற்றும் அவரது குடும்பத்தினர் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெசிகாவின் தந்தை லாட்ஸ் (69), தாயார் விலியன் (60) மற்றும் தங்கை அன்னபெல்லி பால்கோல்ட் ஆகியோர் கடந்த வாரம் பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில் உயிருக்கு போராடியவாறு சிகிச்சை பெற்று வந்த ஜெசிகா பால்கோல்டும் நேற்று பரிதாபமாக மரணம் அடைந்தார். இதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ஜெசிகாவின் மறைவால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *