shadow

ஜெயம் ரவியின் ‘மிருதம்’ படத்தை பார்க்க குழந்தைகளுக்கு தடை
miruthan
ஜெயம் ரவி கடந்த ஆண்டு தனி ஒருவன், சகலகலா வல்லவன், ரோமியோ ஜூலியட் மற்றும் பூலோகம் என நான்கு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இந்நிலையில் இம்மாதம் 19ஆம் தேதி ஜெயம் ரவியின் ‘மிருதம்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் நேற்று முன் தினம் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தனர். ‘ஏ’ சர்டிபிகேட் படம் என்றால் குழந்தைகள் பார்க்க முடியாத படமாக இருக்கும் என்பதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு எடுத்து செல்ல படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் ரிவைசிங்க் கமிட்டிக்கு சென்று வந்தால் காலதாமதம் ஆகிவிடும் என்பதால், வேறு வழியின்றி ‘ஏ’ சர்டிபிகேட்டுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

‘மிருதன்’ திரைப்படம் பிப்ரவரி 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.  இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் 108 நிமிடங்கள் அதாவது 1 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடுகின்றது

ஜெயம் ரவி, லட்சுமிமேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ளார். தமிழில் வெளியாகும் முதல் ஜோம்பி திரைப்படமான இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply