shadow

judge jayalalitha bailஜெயலலிதாவின் ஜாமீன் மனு மற்றும் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி இன்று மறுத்துவிட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவும், ஜாமின் மனுவும் ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு இன்று நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயலலிதாவின் மனுக்களை விசாரணை செய்ய மறுத்த நீதிபதி ரத்னகலா, மேல்முறையீட்டு மனுக்களை வழக்கமாக விசாரிக்கும் நீதிபதிக்கு அனுப்ப உத்தரவிடுவதாக கூறினார். மேலும் வழக்கின் முக்கியத்துவம் கருதியே இந்த  விசாரணையை மாற்றுவதாக அவர் அறிவித்தார்.

நீதிபதியின் இந்த அறிவிப்பால் ஜாமீன் மனு மற்றும் மேல்முறையீட்டு மனு வரும் 7ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 6ஆம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு தசரா விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply