shadow

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தகவல்

opinionதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பை எடுத்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

இதன்படி அதிமுக கூட்டணி 130 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கவுள்ளதாகவும், எதிர்க்கட்சியான திமுக கூட்டணி 70 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் நல கூட்டணி மற்றும் தேமுதிக 30 முதல் 34 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பாமக மற்றும் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் இந்த கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பால் அதிமுகவினர் உற்சாகமாக உள்ளதாகவும், தேர்தல் பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அதிமுக தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக 161 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News:  Tamil Nadu Assembly Elections 2016 opinion poll results: AIADMK to win 130 seats, Jayalalithaa set to dominate again

Leave a Reply