shadow

jayalalithaரயில்வே அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் என்று கருத்து கூறியுள்ள நிலையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று மாலை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், ”மத்திய ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கான ரயில் கட்டணம் உயர்த்தப்படாதது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், சாதாரண மக்களுக்கு இந்த ரயில்வே பட்ஜெட்டில் கூடுதல் சுமை விதிக்கப்படவில்லை.

மேலும், பயணிகளின் பாதுகாப்புக்கும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம், ரயில் நிலையங்களில் கூடுதல் சுகாதார நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.

இருப்பினும், இந்த பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply