shadow

சிவாஜி-ஜெயலலிதாவுடன் நடித்தவர் வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் அவலம்

சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்பவர்கள் ஒருசிலரே என்பதும், இந்த தொழிலில் ஈடுபட்ட பலர் ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் இருப்பவர்கள் பலர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சிவாஜி, ஜெயலலிதா, சிவகுமார், கமல்ஹாசன் போன்றவர்களுடன் குரூப் டான்ஸ் ஆடிய நடிகை ஒருவர் தற்போது வடபழனி கோவிலில் பிச்சை எடுத்து வரும் கொடுமையான செய்தி தற்போது தெரியவந்துள்ளது.

80 வயதான ஜமுனா என்ற முன்னாள் குரூப் டான்சரை சமீபத்தில் ஒரு ஊடகம் கண்டுபிடித்து பேட்டி எடுத்தது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’, சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த ‘சரஸ்வதி சபதம்’, அவ்வையார் உள்பட பல படங்களில் குரூப் டான்ஸ் ஆடியவர் நான். என்னுடைய கணவர் மேக்கப்மேனாக இருந்தவர். குரூப் டான்சராக இருந்தபோது ஓரளவுக்கு வசதியாக இருந்த நான், குடும்பத்தினர் ஒவ்வொருவராக வெறுத்து ஒதுக்கியதால் தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவகுமார், கமல்ஹாசன் போன்றவர்கள் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தனர். ஆனால் அதன்பின்னர் அவர்களிடம் நான் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தன்னால் எழுந்து நடமாட கூட முடியாமல் கையேந்தும் நிலையில் இருப்பதாகவும், தனக்கு விஷால் உதவி செய்ய வேண்டும் என்றும் இறுதியில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜமுனாவின் நிலைமையை அறிந்த பலர் அவருக்கு உதவி செய்ய விஷால் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.ல்

Leave a Reply