shadow

Jayalalitha-and-John-M-Cunhaஜெயலலிதா உள்பட 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா சற்று முன்னர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இந்த உத்தரவு சிறைத்துறை அதிகாரியிடம்  வழக்கறிஞர்களால் வழங்கப்பட்டது.  இதனையடுத்து ஜெயலலிதா பிற்பகல் 3 மணிக்கு சிறையிலிருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையிலிருந்து வெளியே வரும் ஜெயலலிதா,  பரப்பன அக்ரஹாராவிலிருந்து விமான நிலையத்திற்கு காரில் செல்கிறார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை கிளம்பி வருகிறார்..

ஜெயலலிதா இன்று ஜாமீனில் விடுதலையாவதை அடுத்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனி விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்று அங்கு கொட்டும் மழையில் சிறையின் முன் காத்திருக்கின்றார். அதேபோல், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும் பெங்களூரு சிறை அருகில் ஜெயலலிதாவை வரவேற்க மகிழ்ச்சியுடன் முகாமிட்டுள்ளனர். அந்த பகுதியில் அதிமுகவினர் பெருமளவில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply