shadow

jaya and bhavniஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசுத்தரப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம் செய்யப்பட்டது சட்டப்படி செல்லாது என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை அளித்த இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு கருத்தை கூறியதால் இந்த வழக்கு மீண்டும்  3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.;

அன்பழகனின் மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் பானுமதி மற்றும் மதன் ஆகியோர் இரண்டு வெவ்வேறு தீர்ப்புகளை கூறியுள்ளனர். இதில், பவானி சிங்கை நீக்க வேண்டும் என்ற அன்பழகனின் கருத்தை ஏற்க நீதிபதி பானுமதி மறுத்து விட்டார். அதே சமயம் அன்பழகனின் கோரிக்கையை நீதிபதி மதன் பி.லோகூர் ஏற்றுக் கொண்டார்.

நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதன் காரணமாக அன்பழகன் மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

அன்பழகன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியான உடன், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி வெளியிடப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்பழகன் மனு மீதான விசாரணை, வேறு பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஜெ., வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நாட்களுக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply