shadow

jayalalithaசொத்துக்குவிப்பு வழக்கில்  தண்டனை பெற்ற ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கும்படி ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர்களும் கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த 29 ஆம் தேதி அப்பீல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து கடந்த 17 ஆம் தேதி ஜாமீன் பெற்று வெளியே வந்தனர்.

ஆனால், தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனு நிலுவையில் இருந்தது. அந்த மனுக்கள் நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் இன்று  விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Reply