shadow

14நாளை நடைபெற உள்ள பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். மேலும் அவர் சார்பில் பிரதிநிதிகள் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுபோலவே வைகோவின் மதிமுகவும் பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறது.

பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சிகளான தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளது. தேமுதிக சார்பில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர்களும், பாமக சார்பில் ஜி.கே.மணி மற்றும் அன்புமணி ஆகியோர்களும் கலந்துகொள்கின்றனர்.

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த போர்க்குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதாலே முதல்வர் இவ்விழாவை புறக்கணித்துள்ளார். மேலும் வைகோ ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளார்.

நாளை பிரதமர்பதவியேற்பு விழாவை ஒட்டி டெல்லியில் பலத்த காவல் போடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப் உள்பட உலகத்தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply