shadow

கருணாநிதியிடம் இருக்கும் அரசியல் பண்பாடு ஸ்டாலினிடம் இல்லை. தமிழருவி மணியன்
stalin
கருணாநிதியிடம் இருக்கும் அரசியல் பண்பாடு ஸ்டாலினிடம் இல்லை என்றும் அவர் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவைவிட Jayalalitha is more Dictator than Stalin இருப்பார் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய தமிழருவி மணியன் ”தமிழ்நாட்டிலிருந்து திராவிட கட்சிகளை தூக்கி எறிய வேண்டும். அதற்கு நான் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் 25 வேட்பாளர்களை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைக்கிறேன். இவர்கள், உங்கள் வேலைக்காரர்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இவர்களை தொடர்புக் கொண்டு உங்கள் குறைகளை கூறினால் உடனடியாக இவர்கள் அதற்கு பதில் நடவடிக்கை எடுப்பார்கள்.

நாகர்கோவில் சாலைகள் தமிழ்நாட்டிலே மிக மோசமாக காணப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு போகமலே இந்த மோசமான சாலையில் பயணம் செய்யும்போதே பிரசவம் ஏற்பட்டுவிடும். தமிழகத்திலே மிக மோசமான ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது, இதனை அகற்ற வேண்டும். திராவிட கட்சிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். இப்போது மதுக்கடைகளால் தமிழகம் நிரம்பி வழிகிறது. மது மூலமாக வருகின்ற வருமானத்தை நம்பியே ஆட்சி நடக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மது விலக்கு மாநாட்டை நாம் நடத்தினோம். இன்று பல்வேறு கட்சிகள் அதனை பின்பற்றி பல மாநாடுகளையும், பொதுக் கூட்டங்களையும் நடத்துக்கிறது. முத்திரை தாள், கலால் வரி, விற்பனை வரி போன்றவற்றை முறையாக வசூல் செய்தால் மது மூலம் கிடைக்கும் வருமானத்தை ஈடுக்கட்ட முடியும். மது இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்.

அண்ணா கடனுக்கு பெட்ரோல் போட்டவர். கடைசி வரை சொகுசான வாழ்க்கையை விரும்பாதவர். காமராசர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என இந்த உலகுக்கு காட்டியவர். அவர் தான் என் பேச்சைக் கேட்டு தமிழருவி என வாயார அழைத்துப் பாராட்டியவர். ஆந்திராவில் மணலை அரசு விற்கிறது. இங்கு மதுவை அரசு விற்கிறது. கருணாநிதிக்கு இன்னும் பதவி வெறி அடங்கவில்லை. அடுத்த முறையும் முதல்வர் பதவியை அலங்கரிக்க அவர் ஆசைப்படுகிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாற்றம் வராது அதே அமைச்சரவை தான் வரும். அவரது அமைச்சர்களாக இருந்தவர்கள் தங்கள் சொத்து மதிப்புகளை வெள்ளை அறிக்கையில் வெளியிட தயாரா?.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதாவைவிட சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும். கருணாநிதியிடம் இருக்கும் அரசியல் பண்பாடு ஸ்டாலினிடம் இல்லை. அவர் மாவட்டச் செயலாளர்கள், சொந்த கட்சிக்காரர்களையே மதிப்பதில்லை. நிர்வாகிகள் கூறுவதை கூட கேட்பதில்லை. ஜெயலலிதா எளிமையானவராக மாற வேண்டும். ஆட்சி மாற்றம் மட்டும் போதாது நிர்வாகத்திலும் மாற்றம் வேண்டும். சகாயம் பி.ஆர்.பி.கிராணட் முறை கேடுகளை நேர்மையாக விசாரிக்கிறார். அவருக்கு எவ்வளவு தொல்லை கொடுக்க முடியுமோ அவ்வளவு இடையூறுகளை கொடுக்கிறார்கள். நேர்மையான அதிகாரிகளின் நிலை இப்படி தான்’ என்று தமிழருவி மணியன் பேசினார்

Leave a Reply