தேமுதிகவை போல் தரம் தாழ்ந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். அதிமுகவினர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

jayalalithaதேமுதிக தலைவர் நேற்று தஞ்சையில் முதல்வர் படத்தை அகற்ற கூறியதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தமிழகம் முழுவதும் விஜயகாந்துக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விஜயகாந்த்துக்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அதிமுகவினருக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, ‘தேமுதிகவை போன்று தரம் தாழ்ந்த நடவடிக்கையில் இறங்க வேண்டாம்  என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா, விஜயகாந்த்துக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.

சட்டம் தன் கடமையை செய்யும் என விட்டுவிட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உயிர் மூச்சாக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அதிமுகவினருக்கு ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *