jayalalithaசென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 21ஆம் தேதி முதல் ஐந்து இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் வரும் 25ஆம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும். இந்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளரும், முதலவருமான ஜெயலலிதா வரும் 21ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். அன்று மாலை 3 மணிக்கு தனது வீட்டில் இருந்து பிரசார வேனில் கிளம்பும் அவர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேச உள்ளார். ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்கள் மேலும் அதிகமாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். ஜெயலலிதா வருகையையொட்டி, ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக உள்பட முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடாததால், எதிர்க்கட்சிகளின் தரப்பில் இருந்து பிரச்சாரம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *