shadow

jayalalithaஅ.தி.மு.க. மாவட்ட அமைப்புக்களை மாற்றி அமைத்து ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவிக்கும்போது, ”நிர்வாக வசதிக்காக அ.தி.மு.க. மாவட்ட அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்ட அமைப்புகள் மாற்றியமைக்கப்படுகின்றன. இதுவரை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர் கிழக்கு, வேலூர் புறநகர் மேற்கு என்று இருந்த மாவட்ட அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டு, இனி வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு என்று செயல்படும்.

வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக என்.ஜி.பார்த்திபனும், வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் கே.சி.வீரமணியும் செயல்படுவார்கள். வேலூர் கிழக்கு மாவட்டத்தில், அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், வேலூர் மேற்கு மாவட்டத்தில், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், சில அ.தி.மு.க. ஒன்றியங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, பரங்கிமலை கிழக்கு, பரங்கிமலை மேற்கு ஒன்றியங்கள் இணைக்கப்பட்டு, பரங்கிமலை ஒன்றியமாக இனி செயல்படும். இதேபோல், திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஒன்றியங்கள் இணைக்கப்பட்டு, திருப்பூர் ஒன்றியமாக இனி செயல்படும்.

மேலும், கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டங்கள் இணைக்கப்பட்டு, இனி கன்னியாகுமரி மாவட்டமாக செயல்படும். கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக என்.தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், ஈரோடு மாநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் ஆகிய தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாநகரில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளும், திருப்பூர் மாநகரில் அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய பகுதிகளும், திருப்பூர் புறநகரில் தாராபுரம், காங்கேயம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளும் இடம்பெறும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply