shadow

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம். பிரபல இயக்குனர் முயற்சி

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த மாதம் உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி திரையுலகிற்கும் பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் முயற்சி எடுத்துள்ளார்.

இதற்காக அவர் ‘அம்மா’ என்ற டைட்டிலை ரிஜிஸ்தர் செய்துள்ளாராம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் த்ரிஷா அல்லது ரம்யாகிருஷ்ணன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் ஏற்கனவே மேரிகோம், தோனி, சச்சின் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply