தமிழக மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசிற்கு சொந்தமான பொது நிறுவனங்களில் தொடர்ந்து மின் உற்பத்தி குறைந்திருப்பது தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க திட்டமிட்ட சதியோ என்று மக்கள் சந்தேகம் கொள்ள நேரிடும் என்று சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
அத்துடன், ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டுக்கு திமுக மற்றும் மத்திய அரசின் கூட்டுச் சதியே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழகத்துக்கு மின்சாரம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை என்று கூறினார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிப்புக்குள்ளாக்கும் பிரச்சினை குறித்து அவர் கூறும்போது, இப்பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண மத்திய அரசு வியூகம் வகுத்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply