shadow

op and brothersதமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தபோதும், அதன்பின்னர் ஜாமீன் பெற்று போயஸ் தோட்டத்து வீட்டில் இருந்தபோதும், அவருக்கு உண்மையாக இருந்ததாக கூறப்படும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தம்பி மற்றும் உறவினர்கள் மீது அதிமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதல்வர் பதவியில் இல்லாத கடந்த சில மாதங்களில் எந்தெந்த துறைகளில் எவ்வளவு ஊழல்கள் நடந்தது என்பது பற்றி ரகசிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டதாகவும், அந்த விசாரணையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் இருந்த பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் வசம் இருந்த சுகாதாரத்துறை ஆகிய இரு துறைகளிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக ரகசிய அறிக்கை ஒன்று முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரகசிய அறிக்கை முதல்வர் கைக்கு வந்தவுடன் அதிமுக தலைமையிடம் இருந்து உடனே சென்னைக்கு வருமாறு ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தம்பி ராஜாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சொத்துக்கள் வாங்கியது, பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் மீது பெரியகுளம் பூசாரி நாகமுத்து கொலை சம்பவம் தொடர்பாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து ராஜாவிடம் இருந்து பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிமுக தலைமை எழுதி வாங்கியுள்ளது. மேலும் சென்னையில் தங்கியுள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் பார்க்க கூடாது, பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராஜாவை தொடர்ந்து சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜாவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பினாமி என கருதப்படும் அவரது உறவினர்களான வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தார். அதுபோல் அவரது மகன் காசிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வீட்டு வசதி வாரியத்தின் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதிமுக தலைமையின் உத்தரவின் பேரில் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Leave a Reply