shadow

ஜெயலலிதா இருந்திருந்தால் எனது மகளுக்கு சீட் கிடைத்திருக்கும். அனிதா தந்தை உருக்கம்

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தன் மகளுக்கு மருத்துவ சீட் கிடைத்திருக்கும் என்று அனிதாவின் தந்தை வேதனையுடன் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்பிற்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வான நீட், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டினர்.

இதற்கிடையில் நீட் தேர்விற்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று கூறி ஏமாற்றினர். இதனால் தனது மருத்துவ கனவு பலிக்காமல் போய்விட்டதாக கருதி, அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அவர் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ கட்-ஆப்பில் 196.5 எடுத்திருந்தார். அவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு தரப்பினரும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தனது மகளின் மரணம் குறித்து சண்முகம் மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால், தனது மகளுக்கு மருத்துவ சீட் கிடைத்திருக்கும் என்று கூறி, கதறுகிறார். அரசியல் போட்டியால் தனது மகளை கொன்றுவிட்டதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.

Leave a Reply