shadow

மதுவிலக்கை அமல்படுத்திய பீகார் மாநிலத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

nitesh kumarபீகார் மாநிலத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் வெளிநாட்டு மதுவகைகள் தவிர பிறமதுவகைகள் விற்பனைக்கு அனுமதி இல்லை. மதுவை விற்பதோ அல்லது மது வாங்கி குடிப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட நான்கே நாட்களில் புதிய சிக்கல் ஒன்று அம்மாநிலத்தில் தற்போது எழுந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல் செய்யபட்டுள்ளதால் அம்மாநில மதுப்பிரியர்கள் பக்கத்து மாநிலத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். மாநில எல்லையில் அமைந்துள்ள மதுக்கடைகளில் வியாபாரம் மிக அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜார்கண்ட் மாநில எல்லையில் உள்ள மதுக்கடைகளில் பீகார் மக்கள் சென்று மதுவாங்கி குடிப்பதால் மாநில எல்லையில் புதிய கடைகளை திறக்க ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பீகார் மாநில மக்கள் ஜார்கண்ட் சென்று மது குடிப்பதால் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளில் கோடிக்கணக்கில் வியாபாரம் குவிந்து வருவதாக கூறப்படுகிறாது. வருடத்திற்கு சுமார் ரூ.17 கோடி எல்லையில் உள்ள கடைகளில் வியாபாரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுவை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக மதுவிலக்கை அமல்படுத்திய பீகார் அரசுக்கு வருமானம் இழப்பை தவிர வேறு எதுவும் ஏற்படவில்லை. இதனால்தான் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

Leave a Reply