shadow

இந்தியாவின் முதல் புல்லட் ரயில். ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் தரும் ஜப்பான்
bullet
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை தயாரிக்க ஜப்பான் நாடு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

மும்பை – அகமதாபாத் நகரங்களுக்கிடையே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.98 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தீட்டப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக ஜப்பான் நாடு  இந்தியாவுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடியை வட்டியில்லாத கடனாக தர முன்வந்துள்ளதோடு, தங்கள் நாட்டின் தொழில்நுட்பத்தையும் அளிக்க முன்வந்துள்ளது.

2017-ம் ஆண்டு, மும்பை – அகமதாபாத் நகரங்களுக்கிடையே புல்லண்ட் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கும் என்றும் 2023ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வமாக ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேஷியாவில் புல்லட் பாதை அமைக்கும் பணியை சீனாவிடம் இழந்த ஜப்பான், இந்தியாவையும் இழக்க தயாராக இல்லாததால்  ஒரு லட்சம் கோடியை வட்டியில்லாத கடனாக தர முன்வந்துள்ளதாகவும், இந்த திட்டத்தை அடுத்து இந்தியாவில் அடுத்தடுத்த புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணியையும் ஜப்பான் நாடு பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply