shadow

வடகொரியாவை உளவு பார்க்க ஜப்பான் அனுப்பிய செயற்கைகோள்

அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அணு ஆயுத சோதனைகள் மூலம் அச்சுறுத்தி வரும் வடகொரியாவை உளவு பார்க்கும் புதிய செயற்கைக்கோள் ஒன்றினை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோளின் உதவியால் வடகொரியாவின் அணுஆயுத ரகசியங்கள் வெட்டவெளிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து H-2A ராக்கெட் மூலம் ரேடார் 5 என்ற செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. வடகொரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த புதிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த புதிய செயற்கைக்கோள் ஜப்பானின் கடற்பகுதிகளை பாதுகாப்பதோடு, வடகொரியாவை விண்ணில் இருந்தபடி உளவு பார்க்கவும் பயன்படுத்தப்பட்டும் என்று ஜப்பானின் விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த செயற்கைக்கோளின் உதவியால் இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply