shadow

அவசர சட்டம் இல்லை. மோடியின் கைவிரிப்பால் தீவிரமாகிறது போராட்டம்

தமிழக முதல்வர் இன்று காலை பாரத பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் உடனடியாக அவசர சட்டம் இயற்ற வாய்ப்பில்லை என்று பிரதமர் மோடி மறுத்துவிட்டதாகவும், இருப்பினும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மோடியின் இந்த முடிவு காரணமாக போராட்டக்காரர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட போவதாகவும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வரை மெரீனாவை விட்டு அகலப்போவதில்லை என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தற்போது தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும் உடனடியாக ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply