shadow

ஜல்லிக்கட்டு அரசியலை கையில் எடுத்துள்ள தலைவர்கள் கூறுவது என்ன?
jallikattu
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை அளித்ததையொட்டி ஜல்லிக்கட்டு பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து இவ்வருடம் ஜல்லிக்கட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதி பொதுமக்கள் உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் கடந்த பல மாதமாக மதுவுக்கு எதிரான அரசியலை நடத்தி வந்த தமிழக அரசியல் கட்சிகள் தற்போது ஜல்லிக்கட்டு அரசியல் நடத்தி வருகின்றன.

தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த தடை குறித்து என்ன கூறுகின்றனர் என்பதை பார்ப்போம்/

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்: ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசு சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்றார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்: பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க சட்ட ரீதியாக முயற்சிப்போம் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதித்தது ஏற்புடையதல்ல என்றும், தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும், ஜல்லிக்கட்டில் காளைகள் வதை செய்யப்படுகிறது என கூறுவதை ஏற்க முடியாது என்றும் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும், அனைத்து சட்ட நுணுக்கங்களையும் ஆய்வு செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அன்புமணி எம்.பி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், தடையை எதிர்த்து மத்திய அரசு நீதிமன்றத்தை நாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா: ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு:  தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்றும், ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என ஜெய்ராம் ரமேஷ் கூறியது தனிப்பட்ட கருத்து

Chennai Today News: Jallikattu ban by SC: political party leaders reaction

Leave a Reply