shadow

p41ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தமிழகத்தின் பல கிராம தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழங்காலம் முதலே தொன்றுதொட்டும் வரும் வீரவிளையாட்டை நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று அவர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு, தடைவிதிக்க கடந்த சில வருடங்களாகவே புளு கிராஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து, ஜல்லிக்கட்டை தடைசெய்யக் கோரி  நீதிமன்றத்துக்குச் வழக்கு போட்டதால், நீதிமன்றம் சில கட்டுப்பாடு​களை விதித்து ஜல்லிக்கட்டை நடத்திக்கொள்ள இடைக்கால அனுமதியை  வழங்கியது.

ஆனால் கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றும் ஜல்லிக்கட்டை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்றும் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டை முழுமையாக தடை செய்தது. இதனால் தமிழ் அமைப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் வரலாற்று ஆய்வாளரும் தமிழ் அறிஞருமான தொ.பரமசிவன் அவர்கள் செய்தியாளர்களிடம் தீர்ப்பு குறித்து கூறும்போது, “தமிழர்களின் பாரம்பரியம் மிகுந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது எங்களைப்  போன்றவர்களை மிகுந்த மனவேதனை அடையச் செய்துள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலமாகத் தமிழர்களின் பண்பாட்டு வேர் அறுக்கப்பட்டு உள்ளது.

உண்மையில் இந்த வீரவிளையாட்டில் மாடுகளுக்கு எந்த காயமும் ஏற்படுவதில்லை. மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்குத்தான் காயம் ஏற்படும். ஆனால் உச்சநீதிமன்றம் இதை கருத்தில் கொள்ளாமல் விலங்குகளை சித்ரவதை செய்வதாக தவறாக எடுத்துக்கொண்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை அடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வீரர்கள் கையில் ஈட்டியுடன் களத்தில் நிற்பார்கள். பாய்ந்து வரும் மாட்டின் முதுகில் ஈட்டியால் குத்திச் சாய்ப்பார்கள். இங்கே அது மாதிரியான எந்தச் சம்பவமும் நடப்பது இல்லை. இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் கைகளை மட்டுமே நம்பிக் களம் இறங்குவார்கள். மாடுகளுக்காவது கொம்பு இருக்கிறது… வீரர்களுக்குக் கைகளைத் தவிர எந்த ஆயுதமும் கிடையாது.

ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு விளையாட்டு இருக்கிறது. பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் இந்த விளையாட்டுக்களை தடைசெய்வது அந்தந்த சமூகத்தின் அடையாளத்தை அழிக்கும் செயல்.

ஆபத்து இல்லாத விளையாட்டு என்பது உலகில் எந்த விளையாட்டும் கிடையாது. சைக்கிள் பழக வேண்டுமானால்கூட கீழே விழுந்து முட்டியில் காயத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் பழகிவிட முடியாது. கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரர்கள் காயம் படுவதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? ரத்த காயம் படாத விளையாட்டை உலகத்தில் இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

Leave a Reply