ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி மோடியை நேரில் சந்திப்பாரா முதல்வர்?
Jallikattu
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளின் நலன் என்ற போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை அழிப்பது மட்டுமின்றி இதன்பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக மாடுகள் இனங்களை அழித்துவிட்டால், கார்ப்பரே நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து மாடுகளை இறக்குமதி செய்து தங்கள் இஷ்டம்போல் பால் விலையை உயர்த்தி கொள்ளலாம் என்ற திட்டத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உடனடியாக முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து  அவசர சட்டம் இயற்ற வலியுறுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் டெல்லி செல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *