shadow

அஜித் வழியில் செல்லும் அஞ்சலியின் காதலர்

நடிகை அஞ்சலியை காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படும் நடிகர் ஜெய், தற்போது கோலிவுட் திரையுலகில் ஆழமாக காலூன்ற அஜித் வழியை பின்பற்ற தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பைக், கார் ரேஸ்கள் மற்றும் துப்பாக்கி சுடுதலில் அஜித்துக்கு ஆர்வம் அதிகம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஜெய்யும் துப்பாக்கி சுடும் பயிற்சியை பெற்று வருகிறார். தான் துப்பாக்கி சுடும் புகைப்படத்தை நடிகர் ஜெய் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெய் பதிவு செய்திருக்கிறார். ஜெய் ஏற்கனவே அஜித் போல் கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டவர் என்பதும், அதற்கான போட்டிகளில் கலந்துக் கொண்டிருந்தார் என்பதும் தெரிந்ததே. தற்போது துப்பாக்கி சுடுவதையும் அஜித் வழியில் பின் பற்றி வருகிறார்.

நடிகர் ஜெய் தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் ‘பார்ட்டி’, மற்றும் ஜருகண்டி, நீயா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்னும் ஒரு த்ரில் படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply