ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதத்தை  துவங்கியுள்ளார். தனது இல்லத்திற்கு அருகிலேயே அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். இந்த நிலையில் அந்திர கடலோர மாவட்டங்கல், ராயலசீமா, ஆகியபகுதிகளில் 2வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஒரு சில தெலுங்கானா எதிர்ப்பு கோஷ்டிகள் 48 மணி நேர பந்த் அறிவிக்க ஜெகன் மோகன் ரெட்டி 72 மணிநேர பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடைபெற்றதால் இன்றும் சீமாந்திரா பகுதியில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து பெரிய கூட்டம் அவர் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு விரைந்தவண்ணம் உள்ளன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *