shadow

puli

தேவையான பொருட்கள்: 

சாதம் வடித்தது  –  400கிராம் அரிசி வடித்தது

கடலைப்பருப்பு –  2 ஸ்பூன்,தாளிக்க சிறிது

உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்,தாளிக்க சிறிது

தணியா  –   6 ஸ்பூன்

மிளகாய் – 8அரைக்க, தாளிக்க 5,6 மிளகாய்

பெறுங்காயம் – சிறிது

எள் –  2ஸ்பூன்

வெந்தயம் – 1/2 ஸ்பூன்

வேர்க்கடலை – 2 ஸ்பூன் ,தாளிக்க – 2 ஸ்பூன்

கருவேப்பிலை- தாளிக்க

கடுகு – தாளிக்க

புளி – பெரு நெல்லிக்காயளவு – 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு

மஞ்சள் தூள் – சிறிது

உப்பு – தேவைக்கு

நல்லெண்ணை –  1 குழிக்கரண்டி அளவு – தேவைப்பட்டால் இன்னும் சிறிது

தயார் செய்யும் முறை: 

முதலில் கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு,எள்,தணியா,8 மிளகாய்,வேர்க்கடலை 2 ஸ்பூன்,வெந்தயம்பெருங்காயம் உப்பு எல்லாவற்றையும் வெறும்  வாணலியில் வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.பின்னர் வாணலியில் நல்லெண்ணை ஊற்றி சூடுபடுத்தி,கடுகு,கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு,வேர்க்கடலை,கருவேப்பிலை,மிளகாய் எல்லாம் தாளித்து,புளியைக் கரைத்து விடவும்.மஞ்சள் தூள் போட்டு கொதிக்க விடவும்.நன்றாக புளிக்கரைசல் வற்றிக் கெட்டிப் படும் சமயம் இறக்கி,சாதத்தை அதில் கொட்டி கிளறி,அரைத்த மசாலாப் பொடியைத் தூவி கிளறவும்.மசாலா மீதம் இருந்தால் வைத்து விடவும்.காரம் பார்த்து போடவும்.சாதம் தேவைப்பட்டால் கூட சேர்த்துக் கிளறவும்.

அமோகமான ஐயங்கார் புளியோதரைத் தயார்.முதலில் மசாலா ரெடி செய்து சாதம் வடித்து வைத்துவிட்டு,புளிக்கரைசல் கொதிக்க விடவும்

Leave a Reply