shadow

‘மிருதன்’ பின்னணி இசை புது அனுபவமாக இருந்தது. டி.இமான்
imman
கடந்த 2015ஆம் ஆண்டு நான்கு வெற்றி படங்களை கொடுத்து வெற்றி நாயகனாக வலம்வந்த பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரவுள்ள திரைப்படம் ‘மிருதன். நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தமிழில் வெளியாகும் முதல் ஜோம்பி படம் என்ற பெருமையை பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் பின்னணி இசைப்பணியை கடந்த சில நாட்களாக கவனித்து வந்த இசையமைப்பாளர் டி.இமான் நேற்றுடன் இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் பணி முடித்துவிட்டதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

முதன்முதலாக ஒரு ஜோம்பி படத்திற்கு பின்னணி இசையமைத்தது தனக்கு புதுவித அனுபவமாக இருந்ததாகவும் இந்த அனுபவத்தை படம் பார்க்கும்போது ரசிகர்களும் உணர்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதன்முதலாக நடிகை லட்சுமிமேனன் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply