shadow

9வது திருமணத்திற்கு தயாராகும் பிரிட்டன் தொழிலதிபர்

1பிரிட்டனை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரான் ஷெப்பர்டு என்பவர் வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் 9வது முறையாக திருமணம் செய்யவுள்ளார். அவர் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் திருமணம் செய்த 8வது மனைவியை விவாகரத்து செய்கிறார்.

68 வயதான ரான் ஷெப்பர்டு என்பவருக்கு பேரன், பேத்திகள் இருந்தாலும் அவரது திருமண ஆசை மட்டும் போகவில்லை. இதுவரை எட்டு திருமணங்கள் செய்து அனைவரையும் விவாகரத்து செய்துள்ள அவர் தற்போது கால்செண்டர் ஒன்றில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் பெண் கிறிஸ்டல் மார்க்யூஸ் அவர்களுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

ரான் ஷெப்பர்டு கடந்த 1966ஆம் ஆண்டு தனது 19வது வயதில் முதல் திருமணம் செய்தார். அதன்பின்னர் ஒருசில ஆண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அடுத்தடுத்த திருமணங்களை செய்து கொண்டார். தற்போது நடைபெறவுள்ள ஒன்பதாவது திருமணத்தோடு நிற்குமா? அல்லது தொடருமா?என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

Leave a Reply