sundar c and mariyamnபிரபல ஐட்டம் டான்ஸ் நடிகை கர்ப்பமாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடிய நடிகை மரியம், கடந்த 2012ஆம் ஆண்டு திரைப்பட டான்ஸ் பயிற்சியாளர் அரவிந்த் தாக்கூரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்பும் பல படங்களில் அவர் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் மரியம் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். மேலும் ‘நடிகை மரியம் தமிழில் சுந்தர் சி நடித்த நகரம் படத்தில்தான் முதலில் ஐட்டம் டான்ஸ் ஆடினார். தற்போது சுந்தர் சி இயக்கி வரும் ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது கர்ப்பமாகிவிட்டதால் அந்த பாடலில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு அதிருப்தி அடைந்துள்ளார்.

மரியம் தெலுங்கின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். தெலுங்கு ஹிட் படமான 100% லவ், டம்மு, நா இஷ்டம் போன்ற படங்களில் இவர் ஆடிய பாடல் பயங்கர ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மரியம் கர்ப்பம் ஆனதை ஒட்டி அவருடைய திரையுலக தோழிகள் அவருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *