0

இப்போதைய இளைஞர்களை அதிகம் பாதிக்கும் விஷயம் தோல் நோய். கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களிடம் உடை மாற்றி அணியும் போக்கு அதிகமாக உள்ளது. அதேபோல் உள்ளாடைகளை எக்காரணம் கொண்டும் ஈரம் காயாமல் அணியக்கூடாது.

குளித்த பின் உடம்பை நன்கு துடைக்கவேண்டும். ஈரத்துடன் துணிகளை உடுத்தக்கூடாது. அதேபோல் ஒருவர் அணிந்த உடையை மற்றவர்கள் அணியக்கூடாது. இவ்வாறு செய்தால் தோலில் படர்தாமரை நோய் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். குறிப்பாக கால் இடுக்குகளில் அரிப்பு ஏற்பட்டு உள்ளாடைகள் சீல் வடிய ஆரம்பித்து விடும்.

இதனால் காயம் ஏற்பட்டு அந்த பகுதியே கருப்பாக மாறிவிடும். ஜீன்ஸ் பேண்ட் அணிபவர்களாக இருந்தாலும் அதை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். படர்தாமரை என்னும் தோல் அரிப்பு நோய் ஏற்பட்டால் 21 நாட்களுக்கு தொடர் சிகிச்சை எடுத்தால் குணமாகி விடும். தோல் வளர்ச்சி காரணமாக செதில் படை( சொரியாஸ்சஸ்) உண்டாகிறது. இந்த நோய் பரவாது.

தலையில் வெள்ளையாக மீன் செதில் போல் சிறியதாக காணப்படும். முழங்கால், முழங்கைகளில் கூட வரும். இதனால் மூட்டு வலி வரலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துதல் கூடாது. புகை பிடித்தல் கூடாது. மன அழுத்தம் இருக்க கூடாது. இவைகள் இருந்தால் நோய் அதிகமாகும். இந்த நோயை எளிதில் குணப்படுத்த முடியாது. மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *