shadow

இத்தாலி வீரர்களை இந்தியா விடுதலை செய்யுமாறு ஐ.நா கூறியதா? புதிய தகவல்

italyஇந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களை இந்தியா விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு கேரள கடலோர பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள் மீது, அந்த வழியாக சென்ற இத்தாலி கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 2 அப்பாவி மீனவர்கள் கொல்லப்பட்டனர். கடற்கொள்ளையர்கள் என கருதி தவறுதலாக சுட்டுவிட்டதாக இத்தாலி கடற்படை வீரர்கள் விசாரணையின்போது கூறினர்.

லத்தோர் மற்றும் ஜிரோன் என்ற அந்த இரண்டு இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை கைவிடுமாறு இத்தாலி அரசு இந்தியாவை தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் இந்தியா இத்தாலியின் வேண்டுகோளை நிராகரித்தது.

இந்நிலையில் இத்தாலிய கடற்படை வீரர்களில் ஒருவர் உடல் நலமின்றி இருந்ததன் காரணமாக இத்தாலிக்கு அனுப்பப்பட்டார். சிகிச்சை முடிந்த பின்னரும் அவர் இந்திய திரும்பவில்லை. எனவே மற்றொரு கடற்படை வீரரான சால்வடோர் கிரோனி என்பவரை இத்தாலிக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனிடையே, இத்தாலி இந்த விவகாரத்தை ஐ.நா நிரந்தர சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்திடம் இத்தாலி எடுத்துச்சென்றது. இந்த விவகாரத்தில், இந்தியா, இத்தாலி மீனவர்களை விடுவிக்க வேண்டும் ஐநா நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று இத்தாலி அமைச்சர் தெரிவித்த நிலையில், இந்தியா இந்த கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இத்தாலி உண்மையை தவறாக சித்தரிப்பதாகவும், கடற்படை வீரருக்கு ஜாமீன் கோரி, இந்திய சுப்ரீம் கோர்ட்டை இத்தாலி அணுக வேண்டும் என்று ஐநா நடுவர் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளதை, கிரோனியை விடுதலை செய்யுமாறு தீர்ப்பளித்துள்ளதாக இத்தாலி தவறாக சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply