shadow

அலுவலகத்தில் ஆபாச படம் பார்ப்பது தவறா? இத்தாலி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
italy
மதிய இடைவேளையில் ஆபாசப் படம் பார்ப்பதில் தவறில்லை என இத்தாலி நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத்தாலி நாட்டின் பாலெர்மோ நகரில் உள்ள பீயட் நிறுவனத் தொழிற்சாலையில் வேலை நேரத்தில் ஆபாசப் படம் பார்த்ததாக பணியாளர் ஒருவரை அந்நிறுவனத்தின் நிர்வாகம் வேலையிலிருந்து நீக்கியது. இதையடுத்து, அந்த ஊழியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த இத்தாலிய நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பில், ‘உணவு இடைவேளையின்போது ஆபாசப் படம் பார்ப்பது பணிநீக்கம் செய்யுமளவுக்கு மோசமான தவறில்லை’ என்று தீர்ப்பு அளித்ததோடு, பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த பணியாளரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply